முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்!!

தலைப்பை பார்த்த உடன் பதற வேண்டாம்,நாம் தொலைபேசியில் அழைக்கும் நபர்  நம் அழைப்பை ஏற்க வில்லையென்றால் இந்த வசனம் தான் ஒலிக்கும்.இதனால் எவ்வளவோ குடும்பத்தில்,உறவில் மோதலும்,பிரிவும் நடந்துள்ளது,ஏன் கொலை வரை கூட சென்றுள்ளது.இப்போது இதை "நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் காத்திருக்கவும் அல்லது பின்னர் அழைக்கவும்" என மாற்றி விட்டார்கள். நாம் ஒருவருக்கு கால் செய்தால் ஏற்க மாட்டார்கள் அல்லது துண்டிப்பார்கள்,நாமோ சரி ஏதோ வேலையில் இருப்பார்கள் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் நம் அழைப்பை பார்த்த பின்  பேசுவார்கள் என காத்திருப்போம்!! ஆனால் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.   இதற்கு காரணம் : 1.உங்களிடம் பேச விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கலாம், 2.பேசும் மனநிலை இல்லாமல் இருக்கலாம் அல்லது பின்பு பேசிக்கொள்ளலாம் என இருக்கும் , எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை ,ஒரே மனநிலை எப்போதும் இருக்காது அல்லவா!!! ஆனால் ஒருவர் அழைத்தால் திருப்பி அழைப்பது ஒரு அடிப்படை நாகரீகம், சிறந்த பழக்கமும் கூட,சரி  வேலை,சூழ்நிலை ஓகே ஆனால் ஒரு கஷ்டம் (Custom) மெஸ்ஸேஜ்  ...

Gpay போன்ற செயலியில் பணம் அனுப்பும்போது இதை கவனிக்கவும்!!

Gpay போன்ற செயலியில்  பணம் அனுப்பும்போது கவனம் !!! சில நாட்களுக்கு எங்கள் பகுதியில் புதியதாக புட் ட்ரக் கடை வறுத்த சாதம் (fried rice )  துவங்கி இருந்தார்கள்,சரி ருசித்து பார்ப்போமே என சென்றோம், அங்கு ஒருவர் ஏதோ பார்சல் கட்டுங்கனு சொல்லிட்டு,வண்டியில் இருக்கும் Gpay ஸ்கேன் பார்த்து  அவரு பாட்டுக்கு டக்குனு UPI Barcode ஸ்கேன் செய்து பணம் அனுப்பி விட்டு கடைக்காரரிடம் காட்ட, அவரே ஒரே ஷாக்...! அட என்னப்பா கைல பணம் இல்ல அதனால் Gpay செய்துள்ளார் இதுல என்ன ஷாக் ஆக வேண்டி இருக்கு அதானே!!! அதான் ஆனா அந்த வாகனத்தில் ஒட்டி இருந்த UPI ஸ்கேன் கடைக்காரருடையது கிடையாது,இதுக்கு முன்ன இந்த வண்டி வைத்திருந்தவரின் ஸ்கேன் ,இப்போ பணம் கடைக்காரருக்கு போகலை யாருக்கோ போயிருக்கு ,இதுக்கு தான் அந்த ஷாக்க்க்க்.... பின் முகம் எல்லாம் மாறி,இன்னொரு முறை கடைக்காரரிடம் Gpay எண் கேட்டு பணம் அனுப்பினார். உரிமையாளர் மேலும் தவறு உள்ளது, கடை வைத்துள்ளார் இதைக் கூட கவனிக்காமல் வியாபாரம் செய்கிறார்,வாடிக்கையாளரோ ஸ்கேன் செய்து இந்த பெயர் தானா என உறுதி செய்துவிட்டு பணம் அனுப்பி இருந்தால் சிறப்பாக இருந...

பாட் லக் போலாம் வாங்க?

பாட்லக்கா அப்படினா என்ன? சிலருக்கு தெரிந்தும், பலருக்கு தெரியாமலும் இருக்கலாம், பாட்லக் என்றால் கூட்டாஞ்சோறு என கூறலாம்.  அதாவது ஒரு குழுவாக ஒரு இடத்திலோ அல்லது ஒருவர் வீட்டிலோ ஒன்று கூடுவார்கள், ஒவ்வொருவரும் ஒரு உணவை செய்து கொண்டு வர வேண்டும் ,பலரும் ஒரே இடத்தில் பல வகையான உணவுகளை ருசிக்கவும்,ஒன்றாக மனிதர்களுடன் சிரித்து மகிழவும்,நம் அன்பை பகிரவும் பெறவும் இருக்கும்  ஒரு நிகழ்வு தான் பாட்லக்!!! சில  நாட்களுக்கு முன்பு நான் இருக்கும் குழுவில் பாட்லக்  செய்ய திட்டம் போட்டு இருந்தார்கள்,விருப்பமுள்ளவர்கள் இணையலாம் என கூற நானும் இணைந்தேன் (கடைசி நேரத்தில்) லிஸ்ட் போட்டோம் ,யார் யார் என்னென்ன உணவுகள் கொண்டு வருகிறோம் என அதற்கு ஒரு லிஸ்ட்...! எந்த பாட்லாக்காக இருந்தாலும் அதில் சோறு,பொரியல்,பிரியாணி,சப்பாத்தி,ஸ்னாக்ஸ்,இனிப்பு,காரம்,ஜூஸ் என  அனைத்தும் இடம் பெற்றால் சிறப்பு!! நான் சென்ற பிறகு ஒவ்வொருவராக வந்து இணைந்தார்கள்,அனைவரிடமும் பேசி மகிழ்ந்து கொண்டோம், பிரெட் அலவா செய்யவும்,சப்பாத்தி செய்யவும் உடனிருந்து லைட்டா உதவினோம். பின்பு...

எங்க பார்த்தாலும் பேக்கரி?பிரேட்,பிஸ்க்னு குழந்தைகள் உண்ணும் உணவில் இவ்வளவு ஆபத்தா?

நாம் எல்லாம் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மைதாவை உண்போம், யாராவது கேட்டால் "ஒரு நாள் தானே என்ன ஆகப் போகுதுன்னு சொல்வோம்" முக்கியமாக குழந்தைகளுக்கு பிரெட் ,பண் போன்றவை கொடுப்பதை தவிர்க்கலாம், பெரியவர்களுக்கும் தான்...! இதனால் ஏற்படும் பின்விளைவுகள் இப்பொழுது தெரியாது பின்புதான் தெரியவரும். ஆனால், இதனால் தான் வருகிறது என சொல்லவும் முடியாது , ஓரு குழந்தையை ஒழுக்கத்துடன் வளர்ப்பது மட்டும் பெற்றோரின் கடமை அல்ல எது நல்ல உணவு எது உடலுக்கு தீமையான உணவு என சொல்லி ஒரு நல்ல உணவுப்பழக்கத்தை உருவாக்கி கொடுப்பதும் நம் கடமை தான். குறைந்தபச்சம் 5 வயது வரையாவது தவிருங்கள் பிறகு பழகிவிடும். பெரியவர்களும் குழந்தைகள் தான் அவர்களுக்கும் இந்த பிரெட்,பண் எல்லாம் எளிதில் ஜீரணம் ஆகாது அதற்கு ஒரு இட்லி , பால் குடித்துவிட்டு படுக்கலாம். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் மைதா ராஜ்ஜியம் தான் ஒரு ஏரியாக்கு ரெண்டு பேக்கரி , பிஸ்கட், பிரெட்,பண், பிஸ்சா ,எல்லாமே!!!! இதற்கு பதில் ஆர்கானிக் பிஸ்கட்ஸ் விற்கிறது கம்பு,கேழ்வரகு போன்ற Glycemic Index குறைவாக உள்ள பொருட்களில் செய்யப்படுகிறது மைதாவிற்கு இத...

உபயோகிக்கும் பொருள் சேதமானால் உடனே புதிய பொருள் வாங்க வேண்டுமா?

மினிமலிசம் என்றால் தமிழில் எளிமையம் என செல்லலாம் நம் தாத்தா,பாட்டி முன்னோர்கள் எப்படி அத்தியாவசத்தோடு மட்டும் வாழ்ந்தார்களோ அதுதான் மினிமலிசம்.. சிம்பிளா சொல்லனும்மா குறைவான /தேவையான பொருட்களுடன் மனநிறைவாக மகிழ்வாக வாழ்வது, சிக்கனத்திற்கும் மினிமலிசத்தித்திக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. நான் இரண்டு சிம் கார்டு போடும் ஒரு ஸ்மார்ட் போன் தான் உபயோகிக்கிறேன் அதனுடைய கவர்/கவசம் கிழிந்துவிட்டதென வாங்கணும் வாங்கணும் வாங்கணும்னு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன் ஒரு நாள் கை நழுவி மொபைல் திரை உடைந்து விட ஒரு பக்கம் டச் வேலை செய்யவில்லை அப்போது தான் தோன்றியது காலம் தாழ்த்திருக்காமல் ஒரு கவர் போட்டு இருக்கலாம் என. ஷோரூமில் சென்று திரை மாற்ற எவ்வளவு ஆகும் என கேட்டால் 2000 ரூபாய்க்கு மேல் ஆகும் என கூறினார்கள். சரி என்ன செய்யலாம்னு யோசிச்சேன். சிலரிடம் ஆலோசனை கேட்டேன் மூணாயிரம் கொடுத்து திரை மாற்றுவதற்கு பதில் நீ வேற மொபைல் வாங்கிடுனு சொல்ல எனக்கு இந்த மொபைல் மாற்ற மனமும் இல்லை கையில் பணமும் இல்லை😂.. கால் பேசமுடியுது, செல்பி எடுக்க முடியுது, வாட்சப்,மூஞ்சி புக்னு எல்லாம் வருது, 64 ஜிபி ம...

மனிதம் மடிந்து கொண்டிருக்கிறதா,மலர்ந்து கொண்டிருக்கிறதா? இப்புவி அனைத்து உயிர்களுக்குமானது தானே!!!

கடந்த வாரம் இரவு 10 மணி இருக்கும்  வீட்டிற்கு அருகே  வண்டியில் அமர்ந்துகொண்டு நானும் என் நட்பும் பேசிக்கொண்டு இருந்தோம். திடீர்னு டமால்னு சத்தம் சரி என்னனு மெயின் ரோட்டிற்கு சென்று பார்த்தால் நாய்கள்  குலைத்துக் கொண்டு மாட்டை துரத்திக்கொண்டிருந்தது போல, மாடு சாலை பக்கம் ஓட அந்த நேரம் பார்த்து வேகமா வந்த கார் மாட்டின் வலது பக்கத்தில் ஒரே இடி கார் கண்ணாடி,bonnet எல்லாம் சப்பை ஆகி விட மாடு வலியில் துடித்து நடுரோட்டில் சென்று ஆடி அசைந்து நின்றது. கார் ட்ரைவர் வந்த வேகமும் அதிகம் தான், சரக்கா என்னனு தெரியல,நாய்கள் துரத்தி மாடு சாலையில் ஓடியதால் இடித்தாரா என தெரியவில்லை  இதில் யாரை குத்தம் சொல்வது!!! அவர் ஒரு நிமிடம் வெளிய வந்து காருக்கு என்ன ஆச்சுன்னு செக் பண்ணிட்டு நாங்க வந்ததை பார்த்துட்டு எஸ்கேப் ஆகிட்டாரு. மாடு சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தது அதனால் சிறிதும் நகர முடியவில்லை திடீரென இரு காவலர்கள் வர என்னாச்சனு கேக்க, நாங்களும் சாலையில் வசிக்கும் ஒரு பெரியவரும் சொல்ல அவரு தனக்கு தோன்றிய வசனத்தை சொல்லிட்டு டாட்டா காட்டிவிட்டார்.. "ஆமா கண்ட நேரத்துல மாட்டை அவுத்து வ...

சம்பளம் வந்த உடனே பணம் பறந்து விடுகிறதா?

பலரைப் பார்த்துள்ளேன் ஐந்து டிஜிட்டில் சம்பாதிக்கும் நபர்கள் சம்பளம் வந்த 10 முதல் 15 தேதிக்குள் பூஜ்ஜியத்தில் நிற்பார்கள், அவ்வளவு ஏன்?  5 தேதிக்குள் மொத்த பைசாவும் பறந்து மாதம் முழுக்க பத்து பைசாவுக்கு சிங்கி அடிக்க நேரிடும். எப்படா 1 ஆம் தேதி வரும், சம்பளம்  வரும்னு அதை நோக்கியே நம் பயணம் இருக்கும், திரும்ப அதே ஓட்டம் தான் வாழ்க்கை முழுக்க. ஆம்,சம்பளம் வந்த உடனே நம் சுய செலவுக்கோ,சேமிப்பிற்கோ ஒரு துளியேனும் எடுத்த வைக்க வில்லையெனில், வீட்டு வாடகை,EMI,மல்லிகை சாமான்,மருத்துவ செலவு,வீட்டு செலவு,வீட்டிற்கு பணம் கொடுப்பது என வெய்யிலில் கரையும் ஐஸ் கட்டியைப் போல் இருந்த இடமே தெரியாமல் உருகி விடும்.. Pay yourself first  என சொல்வார்கள்,அதாவது சம்பளம் வந்த  பிறகு நம் சேமிப்பிற்கோ,முதலீட்டிற்கோ ஒரு சிறு பகுதி ஒதுக்கி விட வேண்டும்,பின் மீதம் இருக்கும் பணத்தை வைத்து நம் அன்றாட வாழ்வை ஓட்ட முடியும்,ஏனெனில்  ஒதுக்கி வைத்த பணத்தை ஒதுக்கியதே நினைவில் இருக்காது,இது பழகியும் போகும்... எவ்வளவு செலவுகள்,கடன்கள் இருந்தாலும் இதை செய்வது தான் சரியென வல்லுனர்கள்  சொல்கிறார்கள்...