சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என இருந்துவிடக் கூடாது.
சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.
பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம்.
அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது.
பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர்.
மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்"
கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்"
உங்களின் எதிர்காலத்திற்கு ,குழந்தைகளின் கல்வி,மருத்துவம் ,திடீர் ஏற்படும் செலவு,உங்கள் ஓய்வு காலத்திற்கான சேமிப்பு என பலவற்றுக்கு பயனாக இருக்கும்"
"நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்க ஒரு வழி நீங்கள் உருவாக்க வில்லையென்றால்,சாகும் வரை வேலை செய்ய வேண்டி இருக்கும்" என வாரன் பப்பட் கூறியுள்ளார்.
இதுவரை நீங்கள் எந்த சேமிப்பும் செய்யவில்லையென்றால் முதலில் சேமிப்பை தொடங்கவும்,நல்ல திட்டமாக பார்த்து குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ரூபாய் மாதாமாதம் செலுத்துகின்ற மாதிரி முதலீடு தேர்வு செய்யுங்கள்.
எவ்ளோவோ செலவு பண்றோம்,ஆயிரம்லாம் பெரிய விஷயம் இல்ல, முதலீடு எப்போதும் லாங் டேர்ம்மாக இருப்பது சிறப்பபு, காம்புண்ட் எபெக்ட்டினால் உங்கள் முதலீடு அதிக லாபத்தை கொடுக்கும்.
முக்கியமாக இளைஞ்ர்கள் கூடிய விரைவிலேயே முதலீடு செய்வது அவசியம்.
சேமிப்போம்,முதலீடு செய்வோம்,வளம் பெறுவோம்!!!❤️
Super!!
பதிலளிநீக்குமகிழ்ச்சி♥️
நீக்கு