முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

குழந்தைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுக்குறீர்களா?

நான் எதையுமே அனுபவிக்கவில்லை,நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைத்தது இல்லை,அதே மாதிரி என் குழந்தைகளுக்கும் ஆகிவிடக் கூடாதுன்னு தான் இப்படி ஓடிகிட்டே இருக்கேன்,செருப்பு மாதிரி  தேயுறேன்னு இங்கு பலர் தன் பிள்ளைகளின் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்துவிட்டு ,ஆடம்பரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேதனைப்பட்டு,துன்பப்பட்டு ,துயரப்பட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர்..

எல்லாம் சரி தான் பிள்ளைங்க நல்லா இருக்கணும் ,அவர்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்கணும்,அவங்க நினைச்சதை படிக்க வைக்கணும் இன்னும் இதுபோல் பல...

ஆனால் பணத்தை பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது அல்லவா?

முதலில் கேட்பதையெல்லாம் உடனே வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள்,இப்படி ஒவ்வொரு பொருளாக வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்கும்போது அவர்கள் மனதில் தோன்றுவது " நமக்கு எல்லாம் கிடைக்குது அடுத்து இதை கேட்போம் அதை விட இது செமையா இருக்குன்னு மற்றொன்றை கேட்பார்கள்"
அதுவும் தேவையற்ற பொருளாக தான் இருக்கும் ,( முக்கால் வாசி)
ஆனாலும் அதை வாங்கி கொடுப்பீர்கள்,இல்லையெனில் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்,சோர்ந்து விடுவார்கள்..

தேவையில்லாமல் உங்களுக்கும் நஷ்டம்,அவர்களுக்கும் கஷ்டம்...

முதலில் சேமிப்பின் முக்கியத்துவத்தை ,பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அதற்கு முதலில் செய்ய வேண்டியது நீங்கள் சேமிக்க வேண்டும் அதை அவர்கள் பார்க்க வேண்டும், சொன்னால் அவ்வளவு எளிதில் கேட்க மாட்டார்கள் செயல்களே அவர்களை செயல்பட வைக்கும்..

ஒரு பொருள் அவர்கள்  வாங்கி கொடுங்கள் என கேட்டால் உடனே வாங்கி கொடுக்காமல் , நான் அவ்வப்போது சிறிது பணம் கொடுக்கிறேன் சேர்த்து வைத்து வாங்கிக்கோனு சொல்லலாம்  அல்லது அவர்களுக்கு அவர்களே ஓர் இலக்கை நிரணயிக்க சொல்லி அதை நிறைவு செய்ய சொல்லலாம்,உடனே வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அதே போல் மற்றொன்று கேட்பார்கள்,
அவர்கள் பணம் சேர்த்து வைத்து பொறுமையாக வாங்கிய பொருளுக்கு value அதிகம், பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள்,ஒரு பொருள் வாங்க எவ்வளவு சவால்கள் உள்ளது என்பதை அறிவார்கள்...

பணத்தை பற்றிய அறிவை நீங்களும் வளர்த்துக்கொண்டு அவர்களுக்கும் கற்பியுங்கள்...

பணம் மட்டுமே வாழக்கை அல்ல
ஆனால் பணம் நம் வாழ்வின் ஓர் முக்கியமான அங்கம்...!

பயணிப்போம்...!

#minimalism #savings  #financialknowledge #Hoardings #MoneyIsAlwaysUltimate
#financialfreedom மினிமலிசம்

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...